ADDED : செப் 08, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
கண்ணகி நகர்: கண்ணகி நகரில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்ததால், அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
கண்ணகி நகரில் உள்ள 22வது பிளாக்கில், லட்சுமி, 48, அலமேலு, 28, மற்றும் 8 வயது மகள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மூன்று பேரும் வெளியில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர்.
இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
