/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய 19 வீடுகளுக்கு சீல்; 14 வீடுகளுக்கு கெடு
/
பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய 19 வீடுகளுக்கு சீல்; 14 வீடுகளுக்கு கெடு
பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய 19 வீடுகளுக்கு சீல்; 14 வீடுகளுக்கு கெடு
பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய 19 வீடுகளுக்கு சீல்; 14 வீடுகளுக்கு கெடு
ADDED : ஜூலை 01, 2025 12:25 AM
சென்னை, பட்டினப்பாக்கத்தில், வீட்டு வசதி வாரிய பாழடைந்த குடியிருப்பில் 19 வீடுகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது; 14 வீடுகளுக்கு மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
பட்டினப்பாக்கம் காவல் நிலையம் பின்புறம், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன.
மிகவும் பழமையான இந்த கட்டடம், இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்து வந்த, 96 வீடுகளின் உரிமையாளர்களுக்கு வெளியேற கூறி 'நோட்டீஸ்'வழங்கப்பட்டது.
அதன்படி, 31 வீடுகளில் வசித்தோர் வெளியேறிய நிலையில், மீதமுள்ளவர்கள் வெளியேற ஆறு மாதத்திற்கு முன், அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கினர்.
ஆனால், அங்கு வசித்தவர்கள் வெளியேறவில்லை. வந்தவர்கள் தங்களது குடியிருப்பை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் கரிகாலன் தலைமையிலான அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர்.
இதில், 19 வீடுகளுக்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், 14 வீடுகளில் உள்ளோருக்கு காலி செய்ய, மூன்று நாட்கள் கெடு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
நடுத்தட்டு மக்களுக்கு, வாடகை வீடு கட்டி கொடுப்பதற்காக அரசுக்கு வழங்கப்பட்ட கோவில் நிலத்தை, தனியாருடன் இணைந்து பொழுதுபோக்கு மையம் கட்ட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, அனைவரும் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தோம். இங்கு குடியிருப்பவர்கள் யாரும் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை. மாதம் தவறாமல் வாடகை செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.