ADDED : ஆக 23, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
சென்னை, ஆக. 24–
மருத்துவத் துறையில் ஒப்பந்த ஊழியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் அகில இந்திய சங்க தலைவர் காளிதாசன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏழை மக்கள் பயன்பெறும் சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழக மருத்துவத்துறையில் ஒப்பந்த ஊழியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
