தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கணவர் கைது

மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கணவர் கைது

மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கணவர் கைது


UPDATED : மே 16, 2026 06:05 PM

ADDED : மே 16, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 06:05 PM ADDED : மே 16, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சைதாப்பேட்டை:மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்செய்பால், 32. கடந்த 2019ம் ஆண்டு, மனைவியுடன் சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், இவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். சைதாப்பேட்டை போலீசார், மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து, சஞ்செய்பாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

இந்நிலையில், வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருந்த இவர், சில தினங்களுக்கு முன் விருகம்பாக்கம் வருவது போலீசாருக்கு தெரிந்தது. அதன்படி, விருகம்பாக்கத்தில் கண்காணித்த போலீசார், (மே 15)சஞ்செய்பாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us