sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பால் கணவர் தற்கொலை விஷம் கலந்த கேக் சாப்பிட்ட மகன் பலி; மனைவி 'அட்மிட்' 4 வயது மகன் இறப்பு; மகள் 'அட்மிட்'

/

 மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பால் கணவர் தற்கொலை விஷம் கலந்த கேக் சாப்பிட்ட மகன் பலி; மனைவி 'அட்மிட்' 4 வயது மகன் இறப்பு; மகள் 'அட்மிட்'

 மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பால் கணவர் தற்கொலை விஷம் கலந்த கேக் சாப்பிட்ட மகன் பலி; மனைவி 'அட்மிட்' 4 வயது மகன் இறப்பு; மகள் 'அட்மிட்'

 மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பால் கணவர் தற்கொலை விஷம் கலந்த கேக் சாப்பிட்ட மகன் பலி; மனைவி 'அட்மிட்' 4 வயது மகன் இறப்பு; மகள் 'அட்மிட்'


ADDED : பிப் 12, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்: புற்றுநோயால் மனைவி அவதிப்பட்டு வந்த நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த கேக்கை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தனியார் நிறுவன ஊழியர் மற்றும் மகன் உயிரிழந்தனர். மனைவியும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பெரம்பூர், சங்கரமடம் தெருவைச் சேர்ந்தவர் சகாய செபாஸ்டின், 43; தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா, 38. தம்பதியின் மகள் இவாஞ்சலின் அல்வினா, 8, மகன் இவான் ஆன்டோ, 4.

நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் 'ஹேப்பி பேமிலி டே' என எழுதிய கேக்கை சகாய செபாஸ்டின் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர், இரவு உணவு முடித்துவிட்டு அந்த கேக்கை வெட்டி, அனைவருக்கும் கொடுத்துள்ளார். அவர்கள் சாப்பிட்டதும், அனைவரும் படுத்து உறங்கியுள்ளனர்.

அரை மயக்கம் இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையை, நேற்று காலை தொடர்பு கொண்ட ரெக்ஸி பியூலா, அரை மயக்கத்தில் உளறி உளறி பேசியுள்ளார். கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், மகன் இறந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார்.

தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், அரை மயக்கத்தில் கிடந்த ரெக்ஸி பியூலா மற்றும் அவரது மகள் இவாஞ்சலினை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பியூலா சேர்க்கப்பட்டுள்ளார்.

பின், துாக்கில் இருந்து சகாய செபாஸ்டினையும், 4 வயது மகன் இவான் ஆன்டோவின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மன உளைச்சல் முதற்கட்ட விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:

ரெக்ஸி பியூலாவுக்கு புற்றுநோய் உள்ளது; அது நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது. மனைவியின் உடல்நிலை குறித்து கவலை அடைந்த கணவர் சகாய செபாஸ்டின், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், பேக்கரியில் கேக் வாங்கி வந்துள்ளார். வீட்டில் வைத்து, கேக்கில் கரப்பான் பூச்சியைக் கொல்லும் மருந்தை கலந்துள்ளார். அந்த கேக்கை வெட்டி, அனைவருக்கும் சாப்பிட கொடுத்துள்ளார்.

இதையடுத்து தன் அறைக்கு சென்ற சகாய செபாஸ்டின், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கேக்கை சாப்பிட்ட இவான் ஆண்டோ, சில மணி நேரத்தில் இறந்துள்ளார்.

மகள் இவாஞ்சலின் அல்வினாவுக்கு, கேக் சாப்பிட்டது சேராமல் வாந்தி எடுத்துள்ளார்; பியூலாவும் முழுதாக சாப்பிடாததால் அரை மயக்கத்தில் கிடந்துள்ளார்.

காலையில் கண் விழித்த இவாஞ்சலின், தாயை எழுப்பியுள்ளார். அதன்பின் ரெக்ஸி பியூலா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us