/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவி தாக்கியதில் ரத்தம் சொட்ட கணவர் புகார்
/
மனைவி தாக்கியதில் ரத்தம் சொட்ட கணவர் புகார்
ADDED : செப் 05, 2025 02:14 AM

அம்பத்துார் : குடும்ப தகராறில், மனைவி கட்டையால் தாக்கியதில் ரத்தம் சொட்டச் சொட்ட வந்த கணவர் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அம்பத்துார், சோழபுரம், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 63; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவரது மனைவி லதா, 60.
நேற்று மதியம், கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவரது மனைவி, வீட்டில் இருந்த கட்டையால் முத்துக்குமார் தலையில் அடித்ததில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.
இந்நிலையில், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அம்பத்துார் மகளிர் காவல் நிலையத்திற்கு முத்துக்குமார் புகார் அளிக்க சென்றுள்ளார்.
பின், போலீசார் அறிவுரைப்படி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.