/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் விபத்தில் கணவர் பலி மனைவி ' அட்மிட் '
/
பைக் விபத்தில் கணவர் பலி மனைவி ' அட்மிட் '
ADDED : செப் 20, 2024 12:31 AM
தாம்பரம், கடலுார் மாவட்டம், இடையார்குப்பத்தைச் சேர்ந்த விஜயகுமார், 40, அவரது மனைவி குணசுந்தரி, 32, ஆகியோர், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, மின்ட்டில் இருந்து கடலுாருக்கு புறப்பட்டனர்.
சென்னை புறவழிச் சாலை, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலத்தின் மேல், விஜயகுமார் ஓட்டிய பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்க சிமென்ட் தடுப்பு சுவரில் மோதியது.
இதில், தலையில் பலத்தகாயம் மற்றும் மார்பில் உள்காயம் ஏற்பட்டு, விஜயகுமார் அதே இடத்திலேயே இறந்தார்.
தலையில் காயமடைந்த குணசுந்தரி, '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து, குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.