நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நூலகம் வேண்டும்
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் 187, 188 என, இரு வார்டுகள் உள்ளன. மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள இப்பகுதியில், பொது நுாலகம் அமைக்க, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இங்கே, பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான நிலம், கட்டடங்கள் உள்ளன. எனவே, 187 மற்றும் 188 ஆகிய இரு வார்டுகளில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் பயன் பெற, பேருந்து நிலையம் அருகில் பொது நுாலகம் அமைத்திட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சீனி சேதுராமன், ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம்.

