/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 25, 26ல் 'ட்ரோன்' பறந்தால் 'காப்பு'
/
வரும் 25, 26ல் 'ட்ரோன்' பறந்தால் 'காப்பு'
ADDED : ஜன 24, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழக கவர்னர், முதல்வர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக பாதுகாப்பு காரணமாக, 25, 26ம் தேதிகளில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை, முதல்வர் இல்லம் முதல் மெரினா வரையிலான வழித்தடங்கள் அனைத்தும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இப்பகுதிகளில், 'ட்ரோன்'கள் மட்டுமின்றி, எந்தவிதமான பொருட்களும் பறக்க விட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

