/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரந்துார் விவசாயிகளுடன் பேசாவிட்டால் நானே முதல்வரிடம் வருேவன்: விஜய்
/
பரந்துார் விவசாயிகளுடன் பேசாவிட்டால் நானே முதல்வரிடம் வருேவன்: விஜய்
பரந்துார் விவசாயிகளுடன் பேசாவிட்டால் நானே முதல்வரிடம் வருேவன்: விஜய்
பரந்துார் விவசாயிகளுடன் பேசாவிட்டால் நானே முதல்வரிடம் வருேவன்: விஜய்
ADDED : ஜூலை 05, 2025 12:08 AM
சென்னை, ''போராடும் மக்களை சந்தித்து, பரந்துாரில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை முதல்வர் ஸ்டாலின் தர வேண்டும். இல்லாவிட்டால் பரந்துார் விவசாயிகள், மக்களுடன் தலைமைசெயலகம் வந்து, உங்களை சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் எச்சரித்துள்ளார்.
பரந்துார் விமான நிலையம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து, மாநில செயற்குழுவில் த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:
நம் வாழ்வாதாரத்திற்கு விவசாயிகள் முக்கியம். விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நம் கடமை. அந்த கடமையை சரியாக செய்தாக வேண்டும்.
பரந்துாரில், விவசாய நிலங்களை அழித்துவிட்டு விமான நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை நான் சந்தித்தேன். அடுத்தநாள் அரசிடம் இருந்து விளக்க அறிக்கை வந்தது.
அதில், 'மக்களை பாதிக்காத வகையில் விமான நிலையம் அமையும்' என்று தெரிவிக்கப்பட்டது.
மக்களை பாதிக்காத வகையில் என்று சொன்னால் என்ன அர்த்தம் முதல்வர் சார்?
நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், மிகப்பெரிய நீர்நிலைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அந்த இடத்தில் விமான நிலையம் கட்ட என்ன அவசியம் இருக்கிறது.
அப்புறம் எப்படி மக்களின் முதல்வர் என நாகூசாமல் சொல்கிறீர்கள்?
விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய தமிழக அரசு, அவர்கள் கண்ணில் குத்துவது போல அரசாணை உள்ளது. இது, உங்களுக்கு தெரிந்து நடக்கிறதா என்பதற்கும் பதில் இல்லை.
நான் பரந்துார் போராட்ட குழுவினரை சமீபத்தில் சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்பவும், ஒன்றும் குறைந்துவிடவில்லை.
ஜாதி, மதம் கடந்து நீர்நிலைகள், விவசாய நிலங்களை பாதுகாக்க போராடும் மக்களை சந்தித்து பேசுங்கள். உங்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் பேசக்கூடாது. நீங்களே சந்தித்து, அங்கு விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை கொடுங்கள்.
இதை செய்யாமல், எல்லாவற்றையும் கடந்துபோக நீங்கள் நினைத்தால், பரந்துார் விவசாயிகள், மக்களுடன் வந்து, தலைமைசெயலகத்தில் உங்களை சந்தித்து நான் முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழல் வந்தால், அதை சந்திக்க நான் தயார்.
நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சி, புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம்தான் தவறு. இதை நான் சொல்லவில்லை.
விமான பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கின்றனர். அங்கு விமானத்தை இயக்குவதில் பல பிரச்னைகள் இருப்பதாக விமான ஓட்டிகளும் சொல்கின்றனர்.
நீர்நிலைகளை அழித்து கட்டடங்கள், ரன்வே போட்டு விமான நிலையம் அமைத்தால், வெள்ளத்தில் சென்னை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர். இதை மனதில் வைத்து தயவு செய்து முதல்வர், மக்களை சந்தித்து பேச வேண்டும்.
இவ்வாறு விஜய் பேசினார்.