sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பள்ளி பருவத்தில் இருந்தே பக்தியை கடைப்பிடித்தால் வாழ்வில் சிறக்கலாம்: சுவாமி தேவ்ரத் ஜி அறிவுரை

/

 பள்ளி பருவத்தில் இருந்தே பக்தியை கடைப்பிடித்தால் வாழ்வில் சிறக்கலாம்: சுவாமி தேவ்ரத் ஜி அறிவுரை

 பள்ளி பருவத்தில் இருந்தே பக்தியை கடைப்பிடித்தால் வாழ்வில் சிறக்கலாம்: சுவாமி தேவ்ரத் ஜி அறிவுரை

 பள்ளி பருவத்தில் இருந்தே பக்தியை கடைப்பிடித்தால் வாழ்வில் சிறக்கலாம்: சுவாமி தேவ்ரத் ஜி அறிவுரை


ADDED : ஜன 05, 2026 06:07 AM

Google News

ADDED : ஜன 05, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''மாணவ - மாணவியர் ஒழுக்கமாக வாழ்வில் சிறப் புற்று இருக்க, பள்ளிப் பருவத்தில் இருந்து பக்தியை கடைபிடிக்க வேண்டும்,'' என, ஆர்ய சமாஜத்தின் இளைஞர் அமைப்பான, 'சர்வதேசிக் ஆர்ய வீர் தள்' இயக்குநர் சுவாமி தேவ்ரத் ஜி தெரிவித்தார்.

கோபாலபுரத்தில் உள்ள, டி.ஏ.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறுதோறும் காலை வேளையில், மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்கும் காயத்ரி மந்திரம் பாராயணம் நடந்து வந்தது.

இதன் நிறைவு நிகழ்ச்சி காயத்ரி தேவியை மையமாக வைத்து சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.

இதில், 1,200க்கும் மேற்பட்டோர் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பாத பூஜை நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சுவாமி தேவ்ரத் ஜி பேசியதாவது:

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், தினமும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, விலங்குகளை துன்புறுத்துவதை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, சைவ உணவை உண்பது, அவ்வப்போது, ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு உதவுவது போ ன்றவற்றை செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஒழுக்கமாக, வாழ்வில் சிறப்புற்று இருக்க வேண்டுமெனில், பக்தியை பள்ளிப் பருவத்தில் இருந்து கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையின், மருத்துவ இயக்குநர் வைத்தீஸ்வரன் வேலாயுதம் பேசுகையில், ''அனைவரும் அறிவியல் மற்றும் அன்போடு சேர்த்து, பக்தியையும் எடுத்துச் சென்றால். வெற்றி சாத்தியம். நாடு விரைவில் வல்லரசாக உருவாகும்,'' என்றார்.

டி.ஏ.வி., கல்வி குழும செயலர் விகாஸ் ஆர்யா பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் வீடுகளில் தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் அமைதியாக, குடும்பமாக தியானம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது, காலை, மாலையில் சூரியனை வணங்க வேண்டும்.

''பெற்றோர் மற்றும் முன்னோரை தினமும் வணங்க வேண்டும். மாதம் ஒருமுறையாவது குடும்ப உறவுகளை சந்தித்து பேச வேண்டும். இந்த கடமைகளை தவறாமல் கடைபிடிப்பது அவசியம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us