/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இறை நாமம் சொன்னால் மனதின் ஜோதி தெரியும்'
/
'இறை நாமம் சொன்னால் மனதின் ஜோதி தெரியும்'
ADDED : ஜன 02, 2026 05:52 AM

சென்னை: ''இறை நாமத்தை சொல்லிக்கொண்டு இருந்தால், மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி, ஜோதி தெரிய ஆரம்பிக்கும்,'' என, மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜி கூறினார்.
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், 20வது கல்பதரு தினம், நேற்று மாலை திருவான்மியூரில் நடந்தது. இதில், பக்தி பாடல்கள், அருளுரை, 'இறை நாமத்தில் இணைவோம்' என்ற தலைப்பில் , கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜி பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில், பக்தி என்பது நாம சங்கீர்த்தனத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும்.
மனப்பாடம் செய்து பேசுவதில் பக்தி இல்லை. மனம்விட்டு வேண்டுவதில் தான் பக்தி இருக்கிறது.
சென்னையில் திருவொற்றியூர், பாடி, திருவல்லிக்கேணி, திருநீர்மலை போன்ற பகுதிகளில் மகான்கள் வாழ்ந்துள்ளனர். இங்குள்ள கோவில்களில், பிரார்த்தனை செய்தால் பக்தியில் பரவசம் பெற முடியும். ராமகிருஷ்ணரை படித்து, வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ராம நாமத்தை கூறி பிரார்த்தனை செய்வது அவசியம். இறை நாமத்தை சொல்லிக்கொண்டு இருந்தால், மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி, ஜோதி தெரிய ஆரம்பிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

