ADDED : டிச 21, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஐ.ஐ.டி.,க்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் நடக்கின்றன. இதன் காலிறுதி போட்டிகள் நேற்று நடந்தன.
மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை ஐ.ஐ.டி., அணி, 3 - 0 என்ற செட் கணக்கில், ஜோத்பூர் அணியை வென்றது. மாணவியர் பிரிவில், சென்னை அணி, ரூர்கீ அணியை 2 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி, ஹைதராபாத் அணியை 63 - 28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மேலும், மாணவியருக்கான பேட்மின்டன் போட்டியில், சென்னை அணி, 2 - 0 என்ற நேர் செட்டில் கோரக்பூர் அணியை வீழ்த்தியது.

