/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோதமாக இணைப்பு
/
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோதமாக இணைப்பு
ADDED : பிப் 22, 2024 12:40 AM
விருகம்பாக்கம், விருகம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கழிவுநீர் விடப்படும் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம் 129வது வார்டு விருகம்பாக்கம், பாஸ்கர் காலனியில் முதல் தெரு மற்றும் பாரதிதாசன் தெரு உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு பெய்த மழையில், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து, இந்த இரு தெருக்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சில குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக விடப்படுகிறது.
இதனால், மழைநீர் வடிகால் முழுதும் கழிவுநீர் நிரம்பி உள்ளதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், மழைநீர் வடிகால் மேல் மூடியை திறந்து, கொசு மருந்து அடித்து வருகின்றனர்.
எனவே, புது மழைநீர் வடிகாலில் விடப்படும் கழிவுநீர் இணைப்பை கண்டறிந்து, அதை துண்டிக்க மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.