/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டவிரோத மது விற்பனை மதுக்கூட ஊழியர் கைது
/
சட்டவிரோத மது விற்பனை மதுக்கூட ஊழியர் கைது
ADDED : ஏப் 25, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,வடபழநி, கங்கையம்மன் கோவில் தெருவில் 'டாஸ்மாக்' கடையுடன் கூடிய மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியரே, சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக உதவி ஆய்வாளர் முபினாவிற்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை சம்பவ இடத்தில் உதவி ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, மதுக்கூட ஊழியர் கிருஷ்ணகாந்த், 27, என்பவர், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு, காலையிலேயே மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், 13 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.