ADDED : நவ 13, 2026 09:28 PM
சென்னை: சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து, 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பயணியரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பரங்கிமலை, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இணைய சேவை மையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று (நவ.,12), திடீர் சோதனை நடத்தினர்.
இதில், சென்னை மடிப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை, காட்பாடி ஆகிய பகுதிகளில், சட்டவிரோதமாக ரயில் ‘இ – -டிக்கெட்’ விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள தகவலில், சட்டவிரோத இ – -டிக்கெட் விற்பனை தொடர்பாக, கடந்த 2026 ஏப்ரல் முதல் இதுவரை மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
