/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறி கட்டி வந்த குடியிருப்பிற்கு 'சீல்'
/
விதிமீறி கட்டி வந்த குடியிருப்பிற்கு 'சீல்'
ADDED : மே 25, 2025 12:17 AM

மேற்கு மாம்பலம் :கோடம்பாக்கம் மண்டலம், 134வது வார்டு மேற்கு மாம்பலத்தில், ராஜேந்திர பிரசாத் ஒன்றாவது தெருவில், வாகன நிறுத்தத்துடன் கூடிய, 16 வீடுகள் அடங்கிய மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம், பழைய குடியிருப்பாக இருந்து புதிதாக கட்டப்படுகிறது. மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்படுவதாக, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இதையடுத்து கட்டுமான நிறுவனம், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் மேல் முறையீடு செய்து, மூன்று மாதங்கள் அவகாசம் பெற்றது.
அந்த காலக்கெடுவும் முடிந்த நிலையில், உதவி செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி பொறியாளர் தனலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், அசோக் நகர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, அக்கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர்.