/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ்: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ்: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ்: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ்: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ADDED : அக் 31, 2025 01:28 AM

சென்னை:  ஐ.எம்., நார்ம் செஸ் தொடரில், இந்திய வீரர்கள் துவக்கத்திலேயே புள்ளிகள் குவித்து, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சக்தி குழுமத்தின், 34வது தமிழக ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி, போரூரில் நடக்கிறது.
இந்த சர்வதேச தரப் போட்டியில், இந்தியாவின் அபூர்வ் காம்பிளே, ராகவ், தினேஷ்ராஜன், பிரணவ், விக்னேஷ் ஆகியோருடன், பெரு நாட்டை சேர்ந்த கார்லோமாக்னோ ஒப்லிடாஸ், கியூபாவின் டயாஸ்மானி ஓடெரோ அகோஸ்டா உள்ளிட்ட பலரும், திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். உடல்நலக் குறைவால், பெலாரஸை சேர்ந்த போட்டியாளர் போடல்சென்கோ பங்கேற்கவில்லை.
ஐ.எம்., நார்ம் விதிமுறையைப் பெறுவதற்கு, வீரர்கள் ஒன்பது சுற்றுகள் முடிவில், குறைந்தது 6.5 புள்ளிகள் பெற வேண்டும்.
நேற்று மதியம் வரை முடிவடைந்த இரண்டு சுற்றுகளுக்குப் பின், இந்திய வீரர்கள் தங்களின் வலிமையைக் காட்டியுள்ளனர்.
ராகவ், தினேஷ்ராஜன், அபூர்வ் காம்பிளே ஆகியோர், தலா ஒரு புள்ளி பெற்று முன்னிலையில் உள்ளனர். கொலம்பியாவின் பாலென்சியா மோரல்ஸும் ஒரு புள்ளி பெற்றுள்ளார்.

