/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விறுவிறு கட்டத்தை எட்டிய ஐ.எம். , நார்ம் க்ளோஸ்டு செஸ்
/
விறுவிறு கட்டத்தை எட்டிய ஐ.எம். , நார்ம் க்ளோஸ்டு செஸ்
விறுவிறு கட்டத்தை எட்டிய ஐ.எம். , நார்ம் க்ளோஸ்டு செஸ்
விறுவிறு கட்டத்தை எட்டிய ஐ.எம். , நார்ம் க்ளோஸ்டு செஸ்
ADDED : அக் 25, 2025 04:51 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், இந்திய வீரர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
சக்தி குரூப் ஆதரவில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர், போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது. போட்டியில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் மோதி வருகின்றனர்.
மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெறும் இப் போட்டியில், ஐந்து சுற்றுகள் முடிந்துள்ளன. இதில், இந்திய வீரர் அர்னாவ் நான்கு வெற்றி, ஒரு டிரா என 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தியாவின் சாம்யக் தாரிவ் மூன்று வெற்றி, இரண்டு டிரா என நான்கு புள்ளிகள்; மதேஷ் குமார் நான்கு வெற்றி, ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
வெளிநாட்டு வீரர், பெலாரஸின் எவ்ஜெனி பொடோல்சென்கோ மூன்று புள்ளிகளுடன் தொடரில் போட்டியிடுகிறார். இந்தியாவின் ஜெய்சங்கர் 2.5 புள்ளிகளும், பெருவின் கார்லோமாக்னோ ஒப்லிடாஸ் இரண்டு புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களை வகிப்போரில் யார் முதலிடம் பிடிப்பர் என்ற போட்டி நிலவுவதால், ஆட்டம் விறுவிறு கட்டத்தை எட்டியுள்ளது.

