/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறல் கட்டடங்களுக்கு நங்கநல்லுாரில் 'சீல்' வைப்பு
/
விதிமீறல் கட்டடங்களுக்கு நங்கநல்லுாரில் 'சீல்' வைப்பு
விதிமீறல் கட்டடங்களுக்கு நங்கநல்லுாரில் 'சீல்' வைப்பு
விதிமீறல் கட்டடங்களுக்கு நங்கநல்லுாரில் 'சீல்' வைப்பு
ADDED : நவ 21, 2024 12:28 AM

நங்கநல்லுார், -
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இரண்டு கட்டடங்களுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, மாநகராட்சியினர் நேற்று, 'சீல்' வைத்தனர். மேலும், இரண்டு கட்டடங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
சென்னை, நங்கநல்லுாரில் ஐந்து கட்டடங்கள், திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. நகர், ஊரமைப்பு சட்டத்தின்கீழ், எச்சரிக்கை அறிக்கை விடுப்பட்டது.
இந்நிலையில், கனகம்பாள் காலனியில், சாய் என்பவருக்கும், நேருநகரில் வெங்கடேசன் என்பவருக்கும் சொந்தமான, விதிமீறல் கட்டடங்களை, மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று நேற்று, 'சீல்' வைத்தனர். எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.
டி.என்.எச்.பி., காலனி யில், இரண்டு கட்டடங்களை, 'சீல்' வைக்க முயன்றனர். இதற்கு உரிமையாளர் மற்றும் அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒரு கட்டடத்திற்கு ஒரு வாரகால அவகாசமும், மக்கள் குடியிருக்கும் மற்றொரு கட்டடத்திற்கு ஒரு மாத கால அவகாசம் அளித்தனர்.