/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்
/
தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்
தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்
தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : ஜூலை 25, 2025 12:21 AM

பூந்தமல்லி :பூந்தமல்லி நகராட்சியில், தவறாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி, அப்பகுதியில் வசிப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பூந்தமல்லி, கரையான்சாவடி நாவலர் தெருவில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த தெருவில் தேங்கும் மழைநீர், மேற்கு திசை நோக்கி கரையான்சாவடி - ஆவடி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் வழியே சென்று வெளியேற வேண்டும்.
ஆனால், பூந்தமல்லி நகராட்சி பொறியியல் துறையினர், கட்டுமான பணியை தவறாக மேற்கொண்டதால், மழைநீர் எதிர் திசையில் கிழக்கு நோக்கி செல்கிறது.
இதனால், நாவலர் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் 'மேன்ஹோல்' மூடி வழியாக மழைநீர் வெளியேறி, அருகில் உள்ள சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பவித்ரா நகர், அம்பாள் நகர், பிரதீவ் நகர் பகுதியை சூழ்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், மழைநீர் கால்வாயில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து வெளியேறுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. 24 மணி நேரமும் தேங்கி நிற்கும் நீரால், அந்த பகுதியில் உள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது.
அதனால், கரையான்சாவடி- - ஆவடி சாலையில் உள்ள வடிகால்வாய் வழியே மழைநீர் செல்லும் வகையில், வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் எதிர்பார்க்கின்றனர்.