நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டையில் வாகன நெரிசல்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், பழைய காவல் நிலையம் அருகே ஜி.எஸ்.டி., - ரயில்வே லைனை கடந்து, பல்லாவரம் ஏரிக்கு கால்வாய் செல்கிறது. இக்கால்வாயை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக துார்வாரி சீரமைக்காததால், ஒவ்வொரு மழையின்போதும், அங்கு சாலையில் 3, 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கும். நேற்று பெய்த மழையில், 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சானடோரியம் காசநோய் மருத்துவமனை எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் கால்வாயை முறையாக துார்வாராததால், அங்கு முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கி, அவ்வழியாக சென்றோர் பாதிக்கப்பட்டனர்.