/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க புது கிளை துவக்க விழா
/
திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க புது கிளை துவக்க விழா
திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க புது கிளை துவக்க விழா
திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க புது கிளை துவக்க விழா
ADDED : பிப் 17, 2024 11:57 PM

வியாசர்பாடி, தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின், சென்னை கோட்ட செயற்குழு கூட்டம் மற்றும் எழும்பூர், சூளை, ஓட்டேரி, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் புது கிளை துவக்க விழா, நேற்று நடந்தது.
சென்னை கோட்ட தலைவர் எஸ்.தனசேகர் தலைமையில், பெரம்பூர், சேமாத்தம்மன் கோவிலில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில செயலர் கோ.ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் விஜயகுமார் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சென்னை முழுதும் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள், கோட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில், திருக்கோவில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல திருக்கோவில் பணியாளர்களுக்கும் விடுப்பு சலுகை வழங்க வேண்டும்.
திருக்கோவில்களில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.