/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜன 30, 2024 12:36 AM
சென்னை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், வருமான வரித்துறை சார்பில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
வாரிய இணை மேலாண்மை இயக்குனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். கருத்தரங்கில், வருமான வரித்துறை துணை கமிஷனர் ராஜமனோகர், வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டியதன் அவசியம், வரிப்பிடித்தம் செய்த தொகையை, மத்திய அரசின் கணக்கில் உரிய காலத்தில் செலுத்த வேண்டிய கட்டாயம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
வரிப்பிடித்தம் தொடர்பான துண்டுப்பிரசுரம், கையேடு போன்றவை வழங்கப்பட்டது.