/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருமான வரி, இந்தியன் வங்கி அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
வருமான வரி, இந்தியன் வங்கி அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
வருமான வரி, இந்தியன் வங்கி அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
வருமான வரி, இந்தியன் வங்கி அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : மே 01, 2025 11:44 PM

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், மாநில அளவிலான, 19வது ஆண்டு கூடைப்பந்து போட்டி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
இதில், நடப்பு சாம்பியனான இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில் 72, பெண்களில் 32 என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றன.
நேரு விளையாட்டு அரங்கில், நாக் அவுட் முறையிலும், தி. நகர் மைதானத்தில் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி அணி, 67 - 62 என்ற கணக்கில் வருமான வரியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில், வருமான வரி அணி, 73 - 68 என்ற கணக்கில், நடப்பு சாம்பியனான ரைசிங் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.