ADDED : ஜன 18, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார் மண்டலத்தில் பழவந்தாங்கல், முகலிவாக்கம், நந்தம்பாக்கம் பகுதிகளில் நடுத்தர, அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
மீனம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில், காலி மனைகள் அதிகம் உள்ளன.
புயல் மழைக்கு பின், அது போன்ற பகுதிகளில் தேங்கும் மழைநீர், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன.பெருங்குடி மண்டலத்திலும், இதே நிலைதான்.
கொசுக்களை கட்டுப்படுத்த, இரண்டு மண்டலங்களில் மாநகராட்சி தனி கவனம் செலுத்தி, கொசு மருந்து அடிக்க வேண்டும்.
--பாலாஜி, 48, புழுதிவாக்கம்.