/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு
/
விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு
ADDED : ஜூலை 09, 2025 12:11 AM
சென்னை,நான்கு விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகளை நான்காக அதிகரித்து இயக்கப்பட உள்ளது
மும்பை சி.எஸ்.எம்.டி., - எழும்பூர் விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 5ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்
எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படுகிறது
தாதர் - புதுச்சேரி விரைவு ரயிலில் வரும் செப்., 7 முதலும், திருநெல்வேலி - தாதர் விரைவு ரயிலில் வரும் செப்., 9ல் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.