/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீனியர் டிவிஷன் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
/
சீனியர் டிவிஷன் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
சீனியர் டிவிஷன் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
சீனியர் டிவிஷன் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
ADDED : மே 01, 2025 12:24 AM
சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் இந்தியன் வங்கி அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியின் 28 வது நிமிடத்தில், இந்தியன் வங்கி அணியின் மோனிஸ் தன் அணிக்காக முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து 77வது நிமிடத்தில் இந்தியன் வங்கி அணியின் ஆசிப் இரண்டாவது கோலை அடித்தார்.
பின், தமிழ்நாடு போலீஸ் அணியின் ரமேஷ் தன் அணிக்காக ஒரு கோலை அடித்தார். ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணி வென்றது.
ஆட்ட நாயகன் பட்டத்தை இந்தியன் வங்கி அணி வீரர் ஹரிகிருஷ்ணன் பெற்றார்.
***