/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டி இந்தியன் வங்கி அணி வெற்றி
/
மாநில வாலிபால் போட்டி இந்தியன் வங்கி அணி வெற்றி
ADDED : ஜூன் 01, 2025 09:42 PM
சென்னை:கோவை வாலிபால் சங்கம் மற்றும் அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஆடவருக்கான 54வது டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடக்கிறது. அதே இடத்தில், 24வது அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட வாலிபால் போட்டியும் நடக்கிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில், இந்தியன் வங்கி மற்றும் கஸ்டம்ஸ் அணிகள் மோதின. போட்டியின்முதல் செட்டில் இந்தியன் வங்கி அணி சிறப்பாக விளையாடி 26 - 24 என்ற புள்ளிக்கணக்கில், கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது செட்டும் இந்தியன் வங்கி அணிக்கு சாதகமாக அமைய 25 - 18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட கஸ்டம்ஸ் அணி 18 - 25 என்ற புள்ளியில், முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு பதிலடி தரும் வகையில், இந்தியன் வங்கி அணி 25 - 12 என்ற புள்ளிக்கணக்கில் நான்காவது செட்டை கைப்பற்றியது. இதனால் இந்தியன் வங்கி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியது.
மற்றொரு போட்டியில் ஐ.ஓ.பி., அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை 25 - 15, 25 - 15, 25 - 21 என்ற நேர்செட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றது.