/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் துவக்கம்
/
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் துவக்கம்
ADDED : டிச 22, 2024 12:24 AM
மாமல்லபுரம், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில், இந்திய நாட்டிய விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்தாண்டு விழா கடற்கரை கோவில் அருகில், இன்று துவங்கி ஜன., 20ம் தேதி வரை நடக்கிறது.
பரதம், கதகளி, மோகினி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி, ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிற மாநில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் விழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
துவக்க விழாவை முன்னிட்டு, 5:30 மணிக்கு, சென்னை, அரசு இசைக் கல்லுாரி குழுவினரின் மங்கள இசை 6:15 மணிக்கு, சென்னை, ஸ்ரீசாய் நிருத்யாலயா, நந்தினி குழுவினர் பரத நாட்டியம் நடக்கிறது. 7:45 மணிக்கு மதுரை, கலை மேம்பாட்டு நிறுவனம், கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.