/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் இந்திய வீரர் அர்னாவ் முன்னிலை
/
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் இந்திய வீரர் அர்னாவ் முன்னிலை
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் இந்திய வீரர் அர்னாவ் முன்னிலை
ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் இந்திய வீரர் அர்னாவ் முன்னிலை
ADDED : அக் 24, 2025 01:45 AM

சென்னை: ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டியின் நான்காவது சுற்று முடிவில், இந்திய வீரர் அர்னாவ் மகேஸ்வரி முன்னிலையில் உள்ளார்.
'சக்தி குரூப்' ஆதரவில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர், போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது.
போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் என, 10 வீரர்கள் மோதி வருகின்றனர். மொத்தம், ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று மதியம் முடிவடைந்த நான்காவது சுற்று போட்டிகளில், இந்தியாவின் அர்னாவ் மகேஸ்வரி, சக இந்திய வீரரான ஜெய் சங்கர் சுப்பிரமணியை வீழ்த்தி, நான்கு புள்ளிகளுடன் முன்னிலை பிடித்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் சமயக் தரேவா, முன்னிலை வீரர் மதேஷ்குமாரை தோற்கடித்து, மூன்று புள்ளிகள் பெற்றார்.
தோல்வியடைந்த மதேஷ்குமார் மூன்று புள்ளிகளும், ஜெய் சங்கர் சுப்பிரமணி இரண்டு புள்ளிகளும் பெற்று உள்ளனர்.
அதே நேரத்தில், முதல் போட்டியில் தோல்வியடைந்த கியூபாவின் ஜார்ஜ் மார்க்கோஸ், கொலம்பியாவின் வில்சன் கில்லெர்மோ பாலென்சியாவை வீழ்த்தி, இரண்டு புள்ளிகள் சேர்த்தார்.
முதல் மூன்று சுற்று களிலும் வெற்றியின்றி இருந்த அர்ஜென்டினாவின் ரவுல் கிளவேரி, இந்தியாவின் சுன்யுக்தாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
'சர்வதேச மாஸ்டர் முத்திரை பதிக்கப் போவது யார்' என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

