/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலக்ட்ரிக் பைக் எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த கைக்குழந்தை பலி
/
எலக்ட்ரிக் பைக் எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த கைக்குழந்தை பலி
எலக்ட்ரிக் பைக் எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த கைக்குழந்தை பலி
எலக்ட்ரிக் பைக் எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த கைக்குழந்தை பலி
ADDED : மார் 17, 2025 11:43 PM
மதுரவாயல் மதுரவாயல், பாக்யலட்சுமி நகர், அன்னை இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். மோட்டார் மெக்கானிக். இவரது மகன் கவுதம், 31; தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார்.
வீட்டின் மேல் தளத்தில் நடராஜனும், கீழ் தளத்தில் மகன் கவுதம், அவரது மனைவி மஞ்சு மற்றும் ஒன்பது மாத கைக்குழந்தையான எழிலரசியுடன் வசித்தனர்.
வழக்கம்போல, நடராஜன் தன்னுடைய 'ஒக்கினாவா' நிறுவன 2018 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, வீட்டின் போர்டிக்கோவில் கடந்த சனிக்கிழமை இரவு சார்ஜ் போட்டுவிட்டு, மாடியில் படுக்கப் போயுள்ளார்.
இந்த நிலையில், அடுத்தநாள் அதிகாலை அறை முழுதும் கரும்புகை சூழ, கவுதம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் நடராஜன் சர்வீஸ் செய்வதற்காக வைத்திருந்த மோட்டார்கள் தீப்பிடித்து எரிந்தன.
செய்வதறியாது தவித்த கவுதம் குழந்தை மற்றும் மனைவியை காப்பாற்ற முயல, மூவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.
மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த குழந்தை எழிலரசி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. விபத்து குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்து நடந்த இடத்தில், எலக்ட்ரிக் நிறுவனத்தினர் எவரும் இதுவரை வந்து ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.