/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்
/
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 02, 2024 12:38 AM
சென்னை,
சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. கோவிலில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் நேற்று துவங்கியது.
விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு, மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்குகிறது. தினமும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் நடக்கிறது.
இன்று முதல் 12ம் தேதி வரை, தினமும் இரவு மங்களகிரி விமானம்; சந்திரபிரபை; ஆட்டுக்கிடா வாகனம்; நாக வாகனம்; மங்களகிரி விமானம் ஆகியவற்றில், பாலசுப்பிரமணிய சுவாமி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் பிரதான நாளான, 7ம் தேதி காலை 6:00 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது.
அதைத் தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
வரும், 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.
திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு வழங்கப்படுகிறது. நவ., 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை, இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

