/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
/
மின் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ADDED : ஜன 30, 2024 12:09 AM
குன்றத்துார், மாங்காடு நகராட்சி, பாலாஜி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டு மாடியில் கட்டுமான நடக்கிறது.
இந்நிலையில், மனோகரன் மகன் விக்னேஷ், 30, குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சோமசுந்தரம், 65, ஆகியோர், வீட்டின் மாடியில் திருஷ்டி பொம்மை வைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் திருஷ்டி பொம்மையில் இருந்த கம்பி உரசியது.
இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, கருகிய நிலையில் தரையில் விழுந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சோமசுந்தரம் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.