ADDED : ஜன 29, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீசார் பணியிட மாற்றம் ெசய்யப்பட்டு வருகின்றனர்.
ஆவடி கமிஷனர் அலுவலகத்தின் கீழ் பணிபுரியும், வெள்ளவேடு சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் லாரன்ஸ், போரூர் எஸ்.ஆர்.எம்.சி., காவல் நிலையத்திற்கும், அங்கு பணிபுரியும் விஜயகுமார், வெள்ளவேடுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அம்பத்துார் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மோகனவள்ளி, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.இவர்கள் உட்பட, 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.