/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது பயன்பாட்டிற்கான இடத்தில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தல்
/
பொது பயன்பாட்டிற்கான இடத்தில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தல்
பொது பயன்பாட்டிற்கான இடத்தில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தல்
பொது பயன்பாட்டிற்கான இடத்தில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தல்
ADDED : நவ 25, 2025 04:22 AM

பல்லாவரம்: பல்லாவரத்தில், குடியிருப்பு மனைப்பிரிவில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி, பூங்கா அமைத்து தர வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பழைய பல்லாவரம், சாரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், பல்லாவரம், 17வது வார்டில் அமைந்துள்ளது, சாரா நகர் குடியிருப்பு.
இது, 1973ல், சி.எம்.டி.ஏ.,வால் அங்கீகரிக்கப்பட்ட, 56 மனைப்பிரிவுகள் கொண்டது. இந்த குடியிருப்பில், சாரா நகர் குடியிருப்பு மக்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், சாரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திற்காக, ஒரு அறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில், தேசிய கொடி ஏற்றப்படுகிறது. மேலும், குழந்தைகள் விளையாடும் இடமாகவும் உள்ளது.
இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால், குப்பை கொட்டும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் தற்போது மாறிவிட்டது. இதனால், அங்குள்ள குடியிருப்பு மக்கள் நாள்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
மற்றொரு புறம், சமூக விரோதிகள் இந்த இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
பல்லாவரம் நகராட்சி,மாநகராட்சியாக மாறிவிட்ட நிலையில், பல இடங்களில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
அதனால், சாரா நகரில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, சுற்றுச்சுவர் அமைத்து, குழந்தைகள் விளையாடும் விதமாக பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

