ADDED : மார் 09, 2026 05:35 AM
இது குறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது:
திருவொற்றியூரில் படகு குழாம் துவங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், அரசு வசூலிக்கும் கட்டணம் ஊட்டி, கொடைக்கானலை விட அதிகமாக உள்ளது. மேலும், கட்டணத்திற்கு குறைவான நேரம் தான், சவாரிக்கு அனுமதிக்கின்றனர். அதன்படி, நான்கு பேர் மிதி படகு 20 நிமிட சவாரிக்கு, 300 ரூபாய்; இருவர் மிதி படகிற்கு, 200 ரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். கொடைக்கானலில், இதை விட குறைந்த கட்டணத்தில், கூடுதல் நேரம் சவாரி செய்யலாம். இன்னும் சில வாரங்களில், கோடை விடுமுறை துவங்க உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும், படகு குழாமில் சவாரி செய்யும் வகையில், கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.
கட்டண விபரம்
சவாரி வகை திருவொற்றியூர் கொடைக்கானல்
2 பேர் பேடல் படகு ரூ.200 ரூ.150
4 பேர் பேடல் படகு 300 250
8 பேர் விசை படகு 500 (10 நிமிடம்) 1,000 (30 நிமிடம்)
வாட்டர் ஸ்கூட்டர் 500 500
