/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

ADDED : மே 27, 2025 12:22 AM

குன்றத்துார், குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.
குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து, முருகன் கோவில் செல்லும் பிரதான சாலையை ஆக்கிரமித்து, 30க்கும் மேற்கட்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால், சாலை குறுகலாகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை, வருவாய் துறையினர் இடித்து அகற்றினர்.
இந்நிலையில், எட்டு மாதங்கள் கடந்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், முருகன் கோவில் சாலையில், தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் கட்டடங்களுக்கு முன் இரும்பு தகடுகள் அமைத்து, மீண்டும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், விரிவாக்கம் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.