/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிலை கடத்தல் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 அபராதம்
/
சிலை கடத்தல் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 அபராதம்
சிலை கடத்தல் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 அபராதம்
சிலை கடத்தல் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 அபராதம்
ADDED : மே 23, 2025 12:21 AM
சென்னை :சிலை திருட்டு வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, குன்னம் இன்ஸ்பெக்டருக்கு, எழும்பூர் நீதிமன்றம், 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் போலீஸ் நிலையத்தில், 2003ம் ஆண்டு தங்கமணி என்பவர் மீது, சிலை திருட்டு வழக்குப்பதிவானது.
இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது, தங்கமணி தொடர்ந்து ஆஜராகாததால், அவருக்கு எதிராக, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், தங்கமணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., மற்றும் குன்னம் இன்ஸ்பெக்டருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வழக்கு 20 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் போலீசார், தங்கமணியை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, குன்னம் இன்ஸ்பெக்டருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
***