தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட்: கோலப்பாக்கம் அணி சாம்பியன்

பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட்: கோலப்பாக்கம் அணி சாம்பியன்

பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட்: கோலப்பாக்கம் அணி சாம்பியன்


UPDATED : செப் 19, 2026 06:38 PM

ADDED : செப் 19, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 06:38 PM ADDED : செப் 19, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கோலப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சோமசுந்தரம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது.

இதில் சென்னையைச் சேர்ந்த, 30-க்கும் அதிகமான பள்ளி அணிகள் போட்டியிட்டன. போட்டிகள் லீக் கம் நாக்-அவுட் முறையில் நடந்தன. இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

கேளம்பாக்கத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி அணி, கோலப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணியை எதிர்த்து விளையாடியது.

'டாஸ்' வென்ற கோலப்பாக்கம் பள்ளி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு விஷ்வேஷ் வெள்ளைரத்தினம், இஷான் கிருஷ்ணன் ஆகியோர் அபாரமாக விளையாடினர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் கோலப்பாக்கம் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

பின் 186 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய எழும்பூர் அணிக்கு எதிரணியின் பந்துவீச்சு சவாலாக அமைந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டம் கோலப்பாக்கம் அணிக்கு சென்றது. எழும்பூர் அணி போராடி, 50 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கோலப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us