/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை
/
வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை
ADDED : செப் 01, 2025 12:56 AM
சென்னை:பெசன்ட் நகர் கோட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கான வட்டி தள்ளுபடி சலுகையை, வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக வீட்டு வசதி வாரியம், பெசன்ட் நகர் கோட்டத்தில், தவணை முறையில் வீடு, மனை ஒதுக்கீட்டு பெற்றவர்களுக்கு, வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி, முழுதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டி, ஆண்டிற்கு ஐந்து மாதத்திற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெசன்ட் நகர் கோட்டத்தில் ஒதுக்கீடு பெற்று, 2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிந்தும் நிலுவை தொகையை செலுத்தாதவர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, ஒரே தவணையில் செலுத்தி, கிரையப்பத்திரம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.