/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருந்தமணி சிசிச்சை முறைகள் 'சிம்ஸ்' சார்பில் சர்வதேச மாநாடு
/
பெருந்தமணி சிசிச்சை முறைகள் 'சிம்ஸ்' சார்பில் சர்வதேச மாநாடு
பெருந்தமணி சிசிச்சை முறைகள் 'சிம்ஸ்' சார்பில் சர்வதேச மாநாடு
பெருந்தமணி சிசிச்சை முறைகள் 'சிம்ஸ்' சார்பில் சர்வதேச மாநாடு
ADDED : ஜன 12, 2025 11:00 PM
சென்னை:சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சென்னையில் மூன்று நாட்கள் நடந்த, பெருந்தமணி அறுவை சிகிச்சை குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில், 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.
சிம்ஸ் மருத்துவமனை சார்பில், 'அயோட்டா சம்மிட்' என்ற பெயரில், சென்னையில் மூன்று நாள், சர்வதேச பெருந்தமணி சார்ந்த அறுவைச் சிகிச்சைகள், நவீன தொழில்நுட்பங்கள், சவால்கள் குறித்த, மூன்று நாள் மாநாடு, கடந்த 10ம் தேதி துவங்கியது.
மாநாட்டை எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவி பச்சமுத்து துவக்கி வைத்தார். இதில், 350க்கும் மேற்பட்ட சர்வதேச சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு நேற்று நிறைவடைந்தது.
இதுகுறித்து, மாநாட்டின் தலைவரும், சிம்ஸ் மருத்தவமனையின் இதயம் மற்றும் பெருந்தமணி சிசிச்சை துறை தலைவருமான பாஷி.வி.வேலாயுதன் கூறியதாவது:
இதயத்தில் இருந்து, உடல்பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மிகப்பெரிய ரத்தநாளமான பெருந்தமணி, மகாதமணி வழக்கத்தைவிட, 1.5 மடங்கு பெரிதாக வீங்கும். இதை, சிக்கலான அறுவை சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம்.
அதன் வளர்ந்துள்ள தொழில்நுட்பங்கள் குறித்து, சர்வதேச வாஸ்குலர் நிபுணர்களின் நேரடி விளக்கத்தை, இங்குள்ள டாக்டர்கள் பெறுவதற்கான வாய்ப்பை, இந்த மாநாடு வழங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.