ADDED : செப் 28, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'காபா செஸ் அகாடமி' சார்பில், சர்வதேச பிடே ராபிட் ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், அக்., 2ம் தேதி நடக்கிறது.
இதில், ஏழு, ஒன்பது, 11, 13, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஓபன் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தவிர, முதல் 20 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில், மொத்த பரிசுத் தொகையாக, 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள், மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், 94999 15932, 80560 57212 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.