UPDATED : ஜூன் 02, 2026 10:19 PM
ADDED : ஜூன் 02, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
தண்டையார்பேட்டையில், கஞ்சா விற்பனையை தட்டி கேட்டதால், அப்பாவி இளைஞர், சுத்தியல், அம்மிக்கல் போன்றவற்றால் தாக்கப்பட்டு, கஞ்சா கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பாவி இளைஞரை பெற்ற தாயின் கதறலை கேட்டீர்களா முதல்வர் விஜய்?
தங்கள் துாய சக்தி அரசின் துாக்கத்தால், சமூக பொறுப்புள்ள ஒரு இளைஞரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
கஞ்சா கும்பலின் அட்டூழியங்களை மென்மேலும் தொடரவிட்டு, அப்பாவி உயிர்களை பறிப்பதுதான் மாற்றமா?
தங்கள் அரசு ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்து கொள்ளும் வரை, இன்னும் எத்தனை உயிர்களை, தமிழகம் பறிகொடுக்க வேண்டியிருக்கும். பதில் சொல்லுங்கள்; உங்கள் பதிலுக்காக தமிழகமே காத்திருக்கிறது.
- நயினார் நாகேந்திரன்,
தமிழக பா.ஜ., தலைவர்.
