ADDED : செப் 13, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
மகிழ்ச்சியான ‘ஷாப்பிங்’ அப்பளம், சப்பாத்தி, பூரி உட்பட 30க்கும் மேற்பட்ட உணவுகளை, எண்ணெய் இல்லாமல் தயாரித்து வழங்கும் சாதனத்தை வாங்கினோம். இதனால், செலவு மிச்சம். உடல் ஆரோக்கியமும் மேம்படும். தவிர, எம்.வி.எம்., நிறுவனத்தில் கூட்டுப்பெருங்காயம் மலிவான விலையில் கிடைத்ததால், அதை வாங்கினோம். களைப்பே இல்லாமல், மகிழ்ச்சி தரக்கூடிய ‘ஷாப்பிங்’ அனுபவமாக இருந்தது. – சரண்யாஸ்ரீ, 34, கூடுவாஞ்சேரி.
‘தினமலர்’ நாளிதழில் வெளியான, ஷாப்பிங் திருவிழா குறித்த செய்தியை பார்த்து, இங்கு வந்துள்ளோம். ஒரே கூரையின் கீழ், அனைத்து பொருட்களும் கிடைப்பது அலைச்சலை குறைத்ததோடு, நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளது. குறைவான விலையில் டீ -– சர்ட், மசாலா பொருட்களை வாங்கினோம். சமையலறைக்கு உகந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. – அன்பழகன், 63; தமிழ்ச்செல்வி தம்பதியர்; மாதவரம்
‘தினமலர்’ நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான ஷாப்பிங் குறித்த வீடியோ மற்றும் செய்திகளை பார்த்ததும், இக்கண்காட்சிக்கு வர துாண்டியது. இங்கு, உடல் ஆரோக்கியத்திற்கான மூலிகை பொடிகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். முற்றிலும் குளிரூட்டப்பட்ட பிரமாண்ட கூரைக்குள் 200க்கும் மேற்பட்ட கடைகள்; மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. – சந்திரமவுலி, 27 (மகன்), ேஹமா, 50 (தாயார்) குரோம்பேட்டை
குழந்தைக்கு தேவையான ஆடைகள் தரமாகவும், மலிவு விலையிலும் விற்கப்படுகின்றன. முதன் முதலாக, ஷாப்பிங் முறையே புதிய அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு கடையில் இருந்த ஊழியர்கள், விருந்தினரைபோல் வரவேற்று, புன்னகை தவழ பேசியதும், பொருட்களை பற்றி விளக்கியதும் ரசிக்கும்படி இருந்தது. தானியங்கி மசாஜ் கருவிகள் வியப்பை தந்தன. – விஷ்ணு, 32; லட்சுமி, 29: லக்ஷனா 4: மேற்கு முகப்பேர்
குழந்தையை எழுத பழக்குவதற்கான சிறிய நோட் மற்றும் புத்தகங்கள் வாங்கினேன். ‘கமகம’ நொறுக்கு தீனிகள், நாவின் சுவை அரும்புகளை துாண்டியதால், அவற்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டேன். வீட்டு தேவைக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். குழந்தைகளுக்கான பலவித விளையாட்டுகள், அவற்றில் குழந்தைகள் விளையாடி மகிழ்வது, மனதுக்கு புத்துணர்ச்சி அளித்தது. அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைப்பது, நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தி உள்ளது. – மோவிகா, உத்விகா (குழந்தை) குரோம்பேட்டை
வீட்டிற்கு தேவையான தரை விரிப்புகள் மற்றும் தரமான உலர் பழங்கள், மிக மலிவான விலையில் கிடைத்ததால், அவற்றை வாங்கினோம். ‘ஷாப்பிங்’ வந்தது போல் இல்லாமல், சுற்றுலாவுக்கு வந்ததுபோல் இருந்தது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும், ஒரே இடத்தில் கிடைப்பது புதுமையாகவும் இருந்தது. ‘ஏசி, வாஷிங் மிஷின்’ மற்றும் கார், பைக் உட்பட அனைத்து பொருட்களும், ஒரே இடத்தில் கிடைப்பது, மலைப்பை தருகிறது. – சித்ரா குணசேகர், 48; சபரீஷ், 18, நேத்ரா, 20; குரோம்பேட்டை
