பண்டிகை கால பிரத்யேக புடவைகள் அறிமுகம் செய்தது ஆர்.எம்.கே.வி.,
பண்டிகை கால பிரத்யேக புடவைகள் அறிமுகம் செய்தது ஆர்.எம்.கே.வி.,
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:44 PM

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு, பாரம்பரிய மற்றும் பிரத்யேக புடவைகளை ஆர்.எம்.கே.வி., வெட்டிங் சில்க்ஸ் நிறுவனம், அறிமுகம் செய்துள்ளது.
ஆர்.எம்.கே.வி., சில்க்ஸ் தங்களின் புதிய வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில், ‘வேவ்ஸ் அண்ட் வொண்டர்ஸ்’ எனும் தலைப்பில், பண்டிகை கால 18 புடவை கலெக் ஷன்களை, தேனாம்பேட்டையில் நேற்று அறிமுகப்படுத்தியது.
இதில், ஆர்.எம்.கே.வி., குழும இயக்குநர் சங்கர் குமாரசாமி கூறியதாவது:
ஆர்.எம்.கே.வி., சில்க்ஸ் இதுவரை, 120க்கும் மேற்பட்ட புதுமையான புடவை படைப்புகளை உருவாக்கியுள்ளது.
பழங்கால நுட்பங்களையும், 100க்கும் மேற்பட்ட இயற்கை பொருட்களையும் பயன்படுத்தி சாயமிட்ட பட்டு புடவைகள், காப்புரிமை பெற்ற 40 சதவீத எடை குறைந்த ‘லினோ’ பட்டு புடவைகள் உள்ளிட்டவை எங்களது தனித்துவமான படைப்புகளாகும்.
ஆர்.எம்.கே.வி., தற்போது 102வது ஆண்டில் பயணிக்கிறது. எதிர்வரும் பண்டிகை காலத்தை ஒட்டி, 18 புதிய பட்டு புடவைகளை அறிமுகம் செய்துள்ளோம். பெரியோர் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வகை புடவைகளை, ஆராய்ச்சி அடிப்படையில் வடிவமைத்து உள்ளோம். இந்த புடவைகளை சென்னை, தி.நகர் பனகல் பார்க், கோயம்புத்துார், திருநெல்வேலி, மற்றும் பெங்களூருவில் உள்ள ஆர்.எம்.கே.வி., ஷோரூம்களிலும், அதிகாரபூர்வ ‘ஆன்லைன்’ தளத்திலும் பார்த்து தேர்வு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
