/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண் மாற்று சிகிச்சைக்கு பதில் பின்ஹோல் சிகிச்சை அறிமுகம்
/
கண் மாற்று சிகிச்சைக்கு பதில் பின்ஹோல் சிகிச்சை அறிமுகம்
கண் மாற்று சிகிச்சைக்கு பதில் பின்ஹோல் சிகிச்சை அறிமுகம்
கண் மாற்று சிகிச்சைக்கு பதில் பின்ஹோல் சிகிச்சை அறிமுகம்
ADDED : மார் 21, 2025 12:30 AM
சென்னை, கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிக்கு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், பின்ஹோல் சிகிச்சை செய்து, பார்வை திறன் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னையில் அம்மருத்துவ குழும தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:
பேட்மின்டன் விளையாடும்போது, 67 வயது முதியோருக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு, இறந்தவர்களிடம் தானமாக பெறப்படும் கருவிழி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்தது. இதற்கு, பல தையல்கள் போட வேண்டும். அதனால், தொற்று ஏற்படலாம்.
எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக, கருவிழி மற்றும் பிரிந்துவிட்ட விழிப்படலத்தின் முழு அடர்த்தியையும் சரி செய்யும் சிகிச்சையில், விழியின் உட்புறத்திசுக்களை மீண்டும் சரியாக நிலைநிறுத்த திட்டமிட்டோம்.
அதன்படி, கருவிழி கிழிசலை சரி செய்தல், ஒளிப்பிறழ்வுகள் பாதிப்பை தடுக்கும் வகையில், 'பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி' சிகிச்சை முறை செய்யப்பட்டு, அவரது பார்வை திறன் மீண்டும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் கூறுகையில், ''இந்தியாவில் விபத்துகளில் சிக்குவோரில் 32 சதவீதம் பேருக்கு பார்வை திறனிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக, பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது,'' என்றார்.