/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளில் கொசுக்களை விரட்ட 'நிப்போ ஸ்வூப்பர்' அறிமுகம்
/
வீடுகளில் கொசுக்களை விரட்ட 'நிப்போ ஸ்வூப்பர்' அறிமுகம்
வீடுகளில் கொசுக்களை விரட்ட 'நிப்போ ஸ்வூப்பர்' அறிமுகம்
வீடுகளில் கொசுக்களை விரட்ட 'நிப்போ ஸ்வூப்பர்' அறிமுகம்
ADDED : நவ 07, 2024 12:21 AM

சென்னை,
'இன்டோ நேஷனல் நிறுவனம்' வெளியிட்ட அறிக்கை:
இன்டோ நேஷனல் நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தன் தனித்துவமான 'நிப்போ பிராண்டு'க்கு பெயர் பெற்றுள்ளது.
நவீன இந்திய குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில், எங்கள் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், நிப்போ ஸ்வூப்பரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பிராண்ட் புதுப்பிப்பை தொடர்ந்து, இந்த அறிமுகம் தற்போது நிகழ்ந்துள்ளது.
ஜப்பான் நாட்டின், 'மெட்டோப்ளூதெரின்' எனப்படும் எம்.எப்.டி., தொழில்நுட்பத்தில் இந்த ஸ்வூப்பர் வேப்பரைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல் திறன் மற்றும் வீரியமிக்க மூலக்கூறுகள் காரணமாக, நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதில் இது சிறப்பாக செயல்படும்.
இது குறித்து இன்டோ நேஷனல் நிறுவன தலைமை இயக்க அலுவலர் பவன் குமார் கூறுகையில், ''எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான நிப்போ ஸ்வூப்பரை மக்கள் எப்படி ஏற்கின்றனர் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,'' என்றார்.