
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கம்: 116, விலை: ரூ.140
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ரா எழுதிய 25 குறுங்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்மை, காலனிய இந்தியாவுக்குள் இழுத்து செல்லும் கதாபாத்திரங்கள் அனைத்தும் குற்றங்கள் புரிகின்றன. அவை, கண்ணுக்கெட்டாத நிலையில் காற்றாக உலவுவது தான் விந்தை.
ஆசிரியர்: தேவ்தத் பட்நாயக் / ராஜலட்சுமி சிவலிங்கம்
பக்கம்: 208, விலை: ரூ.250
வெளியீடு: காலச்சுவடு
ஹிந்து மதத்தில் ஆழமாக கட்டமைக்கப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் கூறுகளை ஆழமாக ஆராய்கிறது இந்நுால். மேலும் தர்ம சாஸ்திரம், மோட்ச சாஸ்திரம், ஹிந்து புராணங்கள், இந்திய மரபுகளையும் தொடர்ந்து ஆராய்ந்து கட்டுரை களாக எழுதியுள்ளார் நுாலாசிரியர்.
அறம் பொருள் இன்பம் வீடு
ஆசிரியர்: மு.முருகேஷ்
பக்கம்: 32, விலை: ரூ.50
வெளியீடு: அகநி
சிட்டுக்குருவியாய் பறக்கும் சிறுவர் - சிறுமியர் படித்து பழகும் வகையில், சின்ன சின்ன வாக்கியங்களில் சிறந்த ஒரு பக்க கதைகளை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அடுத்தடுத்த பக்கங்களில் அவற்றை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் இளையராஜா கண்ணன். நடுவில் காட்சியாய் விரியும் ஓவியம், நுாலுக்கு பலம் சேர்க்கிறது.
படித்துப் பழகு - 2
குற்ற முகங்கள்

