/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை நபர்களிடம் விசாரணை
/
சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை நபர்களிடம் விசாரணை
சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை நபர்களிடம் விசாரணை
சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை நபர்களிடம் விசாரணை
ADDED : அக் 30, 2025 01:27 AM
சென்னை:  சென்னையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த, இலங்கையைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, குடியுரிமை துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையில் மண்ணடியில் சட்ட விரோதமாக இலங்கை நபர்கள் தங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ேஹாட்டல் ஒன்றில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இசைவேந்தன், 26; யோகராசா, 26; சுஜீவன், 30 ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
இவர்கள், 15 நாட்களுக்கு முன், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக, படகில் தமிழகம் வந்தது தெரிய வந்தது.
இவர்கள் மீது, இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக வழக்குகள் இருப்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.
மூன்று பேர் பற்றி, இலங்கை துணை துாதரக அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அறிவுரைப்படி, மூன்ற பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பும்படி, குடியுரிமை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர்.

